Read in English
This Article is From Jul 21, 2020

சபாநாயகர் 3 நாட்களே அவகாசம் வழங்கினார்: சச்சின் பைலட் அணியினர் உயர் நீதிமன்றத்தில் தகவல்!

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் அணியினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தகுதி நீக்கம் நோட்டீஸ் வழங்குவதற்கு எந்தவொரு குற்றச்சாட்டு ஆதாரங்களும் கிடையாது. அவர் தனது மனதால் மட்டுமே நோட்டீஸ் அனுப்பியதாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். 

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் அணியினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஜெய்பூரில் உள்ள சொகுசு விடுதியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 

அதிருப்தி எம்எல்ஏக்களை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சச்சின் பைலட் மற்றும் பிறர் இரண்டு கூட்டங்களைத் தவிர்த்த பின்னர் தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பும் போது சபாநாயகர் "அவசரம் காட்டியதாகவும், எந்த காரணமும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

Advertisement

மேலும், தொற்றுநோய் பரவல் சமயத்தில், நோட்டீஸூக்கு பதிலளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. இந்த உண்மைகளைப் படித்தால் (எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான) முடிவு ஒரு முன்கூட்டிய எடுக்கப்பட்ட முடிவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை," என்று அவர் வாதிட்டார்.

நேற்றைய தினம், இருதரப்பு மூத்த வழக்கறிஞர்களும் கருத்து வேறுபாடு என்பது கட்சி எதிர்ப்பா என்பது குறித்து வாதிட்டனர். மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களின் மீதான சபாநாயகரின் நடவடிக்கை பேச்சு சுதந்திரத்தை மீறுகிறதா என்றும் அவர்கள் வாதிட்டனர். 

Advertisement

சபாநாயகர் சிபி ஜோசி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி, சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதிருப்தி எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்று வாதிட்டார். 

ஒரு வாரத்திற்கும் மேலாக சச்சின் பைலட் அணியினர் டெல்லியில் இரண்டு சொகுசு விடுதிகளில் தங்கி வருகின்றனர். 

Advertisement

முதல்வர் அசோக் கெலாட் தனது ஆதரவு 103 எம்எல்ஏக்களுடன் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து வருகிறார். இது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான 200 உறுப்பினர்களின் பலத்தை விட கூடுதலாக 2 பேர் ஆதரவு மட்டுமே உள்ளது. 

பைலட் அணிவசம் தற்போது 19 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. மூன்று சுயோட்சை எம்எல்ஏக்கள் உட்பட, முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹனுமான் பெனிவால் உள்ளிட்டோர் ஆதரவுகளை சேர்த்தால், 97 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும். நீதிமன்ற தீர்ப்பிக்கு பின்னர், தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதுவும் மாறக்கூடும், எதிர்கட்சியினரின் பலம் 78 ஆகவும், பெரும்பான்மைக்கு தேவையான பலம் 92ஆக குறையும். 

Advertisement