காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்திற்கு அசோக் கெஹ்லோட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இணைந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஹைலைட்ஸ்
- நாளை முதல் மாநில சட்டசபையின் சிறப்பு அமர்வு தொடங்க இருக்கின்றது
- மாநில காங்கிரஸ் தலைவர்களின் சந்திப்பு தற்போது தொடங்கியுள்ளது.
- சச்சின் பைலட்டுக்கு கைகுலுக்கி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
Jaipur: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் சமீபத்தில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நாளை முதல் மாநில சட்டசபையின் சிறப்பு அமர்வு தொடங்க இருக்கின்றது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர்களின் சந்திப்பு தற்போது தொடங்கியுள்ளது.
தற்போது மாநிலத்தின் ஆட்சியை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான அசோக் கெலாட்டுக்கு எதிராக மாநில துணை முதல் சச்சின் பைலட் போர் கொடி உயர்த்தியிருந்தார். ஏறத்தாழ 19 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சச்சின் தனயே பிரித்து அதிருப்தி எம்.எல்.ஏ குழுவை உருவாக்கியிருந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமீபத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி சச்சின் பைலட்டுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சச்சினுக்கும், முதல்வர் அசோகுக்கும் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதலமைச்சரின் வீட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் கூட்டத்தில் சச்சின் பைலட்டுக்கு கைகுலுக்கி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக எதிர்க்கட்சியான பாஜக அறிவித்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவத்தினை பெற்றுள்ளது.