எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்திக்க காத்திருக்கும் அசோக் கெலாட்!
Jaipur: ராஜஸ்தானில் சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி முதல்வர் அசோக் கெலாட் 100 எம்எல்ஏக்களுடன் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க அவரது இல்லத்தில் காத்திருக்கிறார்.
ஆளுநரை சந்திக்க சொகுசு விடுதியிலிருந்து ராஜ்பவன் அழைத்து வரப்பட்ட எம்எல்ஏக்கள், அங்கு கோஷங்கள் எழுப்பிய படி காத்திருக்கின்றனர்.
இதனிடயை, செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறும்போது, திங்கட்கிழமை முதல் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு வலியுறுத்தி வருவதாகவும், தனக்கு பெரும்பான்மை உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் படியும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
சட்டமன்றத்தை கூட்டுங்கள், சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று ஆளுநர் இல்லத்திற்கு வெளியே நின்றபடி எம்எல்ஏக்கள் தொடர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அதைபோல், தொடர்ந்து, மோதுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நிதீ ஒன்றே நமது மந்திரம் என்றும் முழங்கி வருகின்றனர்.
முதல்வர் அசோக் கெலாட் கோஷம் எழுப்பி வரும் எம்எல்ஏக்களுக்கு மத்தியில் அங்கும், இங்கும் சென்று வருகிறார்.