சச்சின் பைலட் vS அசோக் கெலாட்: எம்எல்ஏக்கள் பலம் எப்படி உள்ளது?. (File photo)
Jaipur: சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவினால், காங்கிரஸ் அரசுக்கு குறுகிய வாய்ப்புகளே கிடைக்கும்.
சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி எம்எல்ஏக்கள் இந்த வழக்கில் வெற்றி பெற்றால், முதல்வர் அசோக் கெலாட் சில நெருக்கடியை சந்திக்க வேண்டிய இருக்கும். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பெரும்பான்மைக்கு தேவையான பலம் குறையும்.
சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 எம்எல்ஏக்களில், 102 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால், பெரும்பான்மைக்கு தேவையான பத்தை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏ பலம் மட்டுமே இருக்கும்.
கிட்டத்தட்ட 87 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளதாக நம்பப்படுகிறது. அவர்கள் அனைவரும் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில், அவர்கள் திரைப்படம் பார்ப்பது, விளையாடுவது, சமைப்பது என்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
பைலட் அணிவசம் தற்போது 19 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. மூன்று சுயோட்சை எம்எல்ஏக்கள் உட்பட, முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹனுமான் பெனிவால் உள்ளிட்டோர் ஆதரவுகளை சேர்த்தால், 97 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்.
நீதிமன்ற தீர்ப்பிக்கு பின்னர், தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதுவும் மாறக்கூடும், எதிர்கட்சியினரின் பலம் 78 ஆகவும், பெரும்பான்மைக்கு தேவையான பலம் 92ஆக குறையும்.