ராஜஸ்தானில் காங்., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக!
Jaipur: ராஜஸ்தான் அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸூம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
சட்டசபையில் முதல்வர் ஒரு நம்பிக்கை தீர்மானம் கோரினால், அது விதிகளின் படி, வேறு எந்த உறுப்பனர் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் விட முன்னதாக இருக்கும்.
ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில், பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதலாக ஒரு உறுப்பினரின் ஆதரவு 102 ஆக மட்டும் இருந்த நிலையிலே முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருந்தார்.
இந்நிலையில், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பியதால், கெலாட்டின் பலம் 125 ஆக இருக்கும். கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போல, ஆட்சியை கவிழ்க்க சச்சின் பைலட் பாஜகவுடன் பேரம் பேசியதாக முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.
பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இது அசோக் கெலாட்டுடன் சட்டப்பேரவையில் மோதுவதற்கு போதுமானதாக இருந்தது. எனினும், சச்சின் பைலட் அணி மனம் மாறுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
125 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் பெரும்பான்மையை நிரூபித்து அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த சல சலப்புகளும் இன்றி ஆட்சியை நடத்த அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எதிர்க்கட்சி தனது அணியை பலப்படுத்தவோ அல்லது எந்தவொரு மூலோபாயத்தையும் திட்டமிடுவதாகவோ கூட தெரியவில்லை, அதன் ராஜஸ்தான் தலைவரான வசுந்தரா ராஜே மவுனத்தை கடைப்பிடித்து வருகிறார்.