Read in English
This Article is From Jun 05, 2019

‘நீட் 2019 தேர்வு’: முதலிடம் பிடித்த ராஜஸ்தான் மாணவர்- முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த முறை நீட் தேர்வுக்கு 15,19,375 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 14,10,755 பேர் தேர்வை எழுதினர்.

Advertisement
Education Edited by

நேரடி லிங்க்: https://ntaneet.nic.in/NTANEET/result/ResultNEET.htm

நீட் 2019 தேர்வில், ராஜஸ்தானைச் சேர்ந்த நலின் கந்தேல்வால் அனைத்திந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நலின், மொத்தம் உள்ள 720 மதிப்பெண்களில் 701 மார்க் எடுத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த பாவிக் பன்சால் என்ற மாணவர் இரண்டாம் இடத்தையும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அக்‌ஷத் கவுஷிக் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். 

பெண்களைப் பொறுத்தவரை தெலங்கானாவைச் சேர்ந்த மாதுரி ரெட்டி, 695 மதிப்பெண்கள் எடுத்து 7வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த முறை நீட் தேர்வுக்கு 15,19,375 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 14,10,755 பேர் தேர்வை எழுதினர். அதில் 7,97,042 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

என்.டி.ஏ அமைப்பு இன்று நீட் 2019 தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஒடிசாவில் ஃபனி புயல் காரணமாகவும், கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாகவும் சில மாணவர்கள் நீட் தேர்வை குறிப்பிட்ட தேதியில் எழுத முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மே 20 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. என்.டி.ஏ அமைப்பு, நீட் தேர்வுக்கான விடைத்தாளையும் வெளியிட்டுள்ளது. 

Advertisement

நீட் 2019 முடிவுகள்: எப்படி தெரிந்துகொள்வது?

ஸ்டெப் 1: ntaneet.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லுங்கள்.

Advertisement

ஸ்டெப் 2: முடிவுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: மாணவர்களுக்காக இருக்கும் தளத்திற்குள் லாக்-இன் செய்யவும்.

Advertisement

ஸ்டெப் 4: நீட் முடிவுகளை தெரிந்து கொள்ளவும்.

நேரடி லிங்க்: https://ntaneet.nic.in/NTANEET/result/ResultNEET.htm

Advertisement

“எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பட்டங்களுக்குப் படிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட ஆண்டில் நடத்தப்படும் நீட் தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

அதே நேரத்தில், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகித மதிப்பெண்களை எடுத்தால் தகுதி பெறுவார்கள். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 45 சதவிகிம் மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி பெறுவார்கள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 40 சதவிகிதம் எடுத்தால் தகுதி பெறுவர்” என்று நீட் தேர்வு தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

முடிவுகளை வெளியாவதைத் தொடர்ந்து என்.டி.ஏ அமைப்பு, அனைத்திந்திய அளவில் இருக்கும் 15 சதவிகித இடங்களுக்கான  மெரிட் பட்டியலை தயாரிக்கும். அதையடுத்து கவுன்சிலிங் நடைபெறும். 


 

Advertisement