This Article is From Dec 27, 2018

ராஜஸ்தான் காங்.-ல் மோதல் : நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இலாகா ஒதுக்கீடு

ராஜஸ்தான் அரசியலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டிற்கும் இடையிலான மோதல் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் காங்.-ல் மோதல் : நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இலாகா ஒதுக்கீடு

இலாகாக்களை ஒதுக்குவதில் ராகுல் காந்தி தலையிட்டு சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Jaipur:

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையிலான மோதல் நீடித்து வருகிறது. கடந்த திங்களன்று காங்கிரஸ் அமைச்சரவை பொறுப்பு ஏற்றது.

இருப்பினும், துறைகள் யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று முழுவதும் இலாகா ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் முதல்வர் அசோக் கெலாட்டும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் பிடி கொடுக்காமல் பேச்சுவார்த்தை செய்தனர். 

இதனால், யாருக்கு எந்த துறைகளை ஒதுக்கீடு செய்வது என்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட்டு இரு தலைவர்களையும் சமாதானம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பின்னர் ஒருவழியாக இலாகாக்கள் பிரிக்கப்பட்டு, அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு நள்ளிரவு 2.30-க்கு வெளியிடப்பட்டது. இதன்படி முதல்வர் அசோக் கெலாட்டுக்கு 9 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிதி, உள்துறை, கலால், திட்டம், பணியாளர் நலன், பொது நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகள் அசோக் கெலாட் வசம் வந்துள்ளது. 

துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கு பொதுப்பணித்துறை, கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜியம், அறிவியல் தொழில் நுட்பம், புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

2019 தேர்தலை கருத்தில் கொண்டு ராஜஸ்தானில் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரேயொரு எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 அமைச்சர்கள் கடந்த திங்களன்று பொறுப்பு ஏற்றனர். 

.