This Article is From Jul 24, 2020

தனக்கு பெரும்பான்மை உள்ளதாக ஆளுநரிடம் கூறிய அசோக் கெலாட்!

Rajasthan: மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு பெரும்பான்மை உள்ளதாக ஆளுநரிடம் கூறிய அசோக் கெலாட்!

தனக்கு பெரும்பான்மை உள்ளதாக ஆளுநரிடம் கூறிய அசோக் கெலாட்! (File)

Jaipur:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், சட்டமன்ற கூட்டத்தை கூட்டும் படியும் ஆளுநரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் விரைவில் சட்டமன்ற கூட்டம் கூடும் என்று அசோக் கெலாட் தெரிவித்தார். 

இதுதொடர்பாக ராஜ்பவன் வட்டாரங்கள் என்டிடிவியிடம் கூறியதாவது, கடந்த 2 வாரங்களாக அதிருப்தி எம்எல்ஏக்களால், ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து,, சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாகவும், எனினும் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒருபக்கம் சச்சின் பைலட் தரப்பு நீதிமன்ற தீர்ப்பை காட்டி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. 

இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், விரைவில் சட்டமன்றம் கூட்டம் கூட்டப்படும் என்றும், தனக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதல், சில அதிருப்தி எம்எல்ஏக்களும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். அவர்களின் ஆதரவு இல்லையென்றாலும், எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. அதனை நாங்கள் நிரூபிப்போம் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், கெலாட் கூறும்போது, சில அதிருப்தி எம்எல்ஏக்கள் எங்கள் வர தாயாராக இருக்கின்றனர். அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு தங்களால் வெளியே வர முடியவில்லை என்றும், பாதுகாப்புக்காக குண்டர்கள் பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதனால், எம்எல்ஏக்கள் வெளியில் வரும் பட்சத்தில் சிலர் எங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அந்த கூட்டங்களில் பங்கேற்காததால், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் அனைவரையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து, தகுதிநீக்கத்திற்கு எதிராக சச்சின் பைலட் தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 101 உறுப்பினர்களை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் பலத்தை மட்டுமே அசோக் கெலாட் தரப்பு கொணநடுள்ளது. அதனால், சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறையும் அதனால், கெலாட் தரப்பு எளிதில் வெற்றி பெறலாம். 

ஆனால், தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து காங்கிரஸூக்கு எதிராக வாக்களிக்கலாம். அதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் அதிகாரத்தில் நீடிப்பது கடினமாகும். 
 

.