Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 29, 2018

ராஜஸ்தான் தேர்தல்: சொந்த தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடும் முதல்வர்!

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, தனது சொந்த தொகுதியான ஜல்ரபதானிலிருந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்

Advertisement
இந்தியா

சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், ராஜே

Jaipur:

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, தனது சொந்த தொகுதியான ஜல்ரபதானிலிருந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ‘ஜாலாவார் மக்களுடன் எனக்கு 30 ஆண்டுகள் தொடர்பு இருக்கிறது. எனக்கு இந்த மக்கள் அன்பையும் பாசத்தையும் பொழிந்துள்ளனர். ஜாலாவார் மற்றும் பரன் மாவட்டங்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன்.

இம்முறை நடக்க உள்ள தேர்தலில் 200 தொகுதிகளிலும் பாஜக-வை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இருந்தாலும், குறிப்பிட்ட 100 தொகுதிகளில் எனது கவனம் அதிகமாக இருக்கும். பாஜக, ராஜஸ்தானில் மீண்டும் வென்று ஆட்சி அரியணையில் அமரும்' என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ஜல்ரபதன் தொகுதியில் ராஜே, கடந்த 2003, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.

Advertisement