This Article is From Jul 21, 2018

குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு மரண தண்டனை அறிவிப்பு

பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம், ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது

குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு மரண தண்டனை அறிவிப்பு

பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம், ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு கீழ், ராஜாஸ்தானில் முதன் முறையாக இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 7 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 19 வயதாகும் இளைஞர், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். மே மாதம் 9 ஆம் தேதி, குழந்தையின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 19 வயது வாலிபன், அந்த பெண் குழந்தை தூக்கிச் சென்றுள்ளான். குழந்தை எங்கே என்று பெற்றோர்கள் உறவினரிடம் கேட்க, 19 வயது வாலிபன் குறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர் குழந்தை, வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் மைதானத்தில் அழுது கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 20 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சோதனையில் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது தெரியவந்தது.

இது தொடர்பாக 19 வயது வாலிபன் மீது வழக்கு தொடரப்பட்டு, மிக வேகமாக விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்து இன்று ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த இளைஞருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் தான் ராஜஸ்தானில், 12 வயதுக்குக் கீழே இருக்கும் பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டது. எனவே, இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று யூகிக்கப்பட்ட நிலையில் அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

'ராஜஸ்தானில் இந்த புதிய சட்டம் பயன்படுத்தப்படும் முதல் வழக்கு இதுதான். நாட்டில் இதற்கு முன்னர் இதைப் போன்று 2 வழக்குகள் பதியப்பட்டு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று வழக்கு குறித்து வாதாடிய குல்தீப் ஜெயின் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மத்திய பிரதேச அரசு, இதைப் போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் பிறகு நாட்டிலேயே இரண்டாவதாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ராஜஸ்தான் அரசுகடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.

 

.