This Article is From Jul 31, 2020

குதிரை பேரத்தை தடுக்க எம்எல்ஏக்களை இடம் மாற்றும் அசோக் கெலாட்!

அதிருப்தி எம்எம்எல்ஏக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

Rajasthan Crisis: குதிரை பேரத்தை தடுக்க எம்எல்ஏக்களை இடம் மாற்றும் அசோக் கெலாட்!

Jaipur/ New Delhi:

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்கொடி தூக்கியது முதல், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100 பேர் ஜெய்ப்பூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தனி விமானம் மூலம் அவர்கள் அனைவரும் வேறு இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட உள்ளனர். 

ஆக.14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை தொடங்கும் வரை அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 102 பேரும் வேறு வேறு இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

அதிருப்தி எம்எம்எல்ஏக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இதற்காக, சட்டப்பேரவையை கூட்டக்கோரி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை ஆளுநர் ஏற்க மறுத்து வந்தார். 

இதையடுத்து, நீண்ட கோரிக்கைக்கு பின்னர் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தார். இதனிடையே, நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், சட்டசபை அமர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், குதிரை பேரத்தின் விலை அதிகரித்துள்ளது.

முதல் தவணை ரூ.10 கோடியாகவும், இரண்டாவது தவணை ரூ.15 கோடியாகவும் இருந்தது. இப்போது அது வரம்பற்றதாகிவிட்டது, யார் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று கூறினார்.

முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை இன்றைய தினம் நிரூபிக்க வேண்டும் என்று கூறி சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தியிருந்த நிலையில், ஆளுநர் 21 நாட்கள் கழித்து சட்டப்பேரவையை கூட்ட ஒப்புதல் தெரிவித்துள்ளார். 

நான்காவது முறையாக அசோக் கெலாட் விடுத்த கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, தங்களது பெரும்பான்மையை 21 நாட்கள் கழித்தோ 31 நாட்கள் கழித்தோ, எந்த நேரத்திலும் நிரூபிக்கலாம் என்பதில் கெலாட் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

.