அசோக் தரப்பு எம்.எல்.ஏக்கள் நாளை சட்டமன்றத்தை ஆளுநர் கூட்ட வேண்டுமென கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Jaipur: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்றத் தொடரை நடத்தக்கோரி ஆளுநர் மாளிகையை தனது எம்.எல்.ஏக்களுடன் முற்றுககையிட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது, குடியரசு தலைவரையும் சந்திக்க தயராக இருப்பதாக அசோக் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியின் பலத்தினை நிருப்பிக்க வழிவகை செய்யும் சட்டமன்ற கூட்டத்தினை நடத்த தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்தே குடியரசு தலைவரை சந்திக்க இருப்பதாக அசோக் தெரிவித்துள்ளார்.
கெஹ்லோட் தனது அமைச்சரவையை சந்தித்தபோது, ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்திர கட்டாரியா தலைமையிலான பாஜக தூதுக்குழு ஆளுநரை சந்தித்து மாநிலத்தின் கோவிட் -19 நிலைமை குறித்து விவாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அசோக் கெலாட் சட்டமன்ற கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வருகிறார். “பாஜக சதி வெற்றிபெற அனுமதிக்கப்படாது. தேவைப்பட்டால் நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்வேன். நாங்கள் ராஷ்டிரபதி பவனில் அல்லது பிரதமரின் இல்லத்தில் கூட மறியல் செய்ய நேரிடும்.” என அசோக் கெலாட் தரப்பு கூறியுள்ளது.
முதல்வருக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஆடம்பரமான ஃபேர்மாண்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மை எங்களிடம் உள்ளது என அசோக் தெரிவித்துள்ளார்.