Read in English
This Article is From Jul 14, 2020

கார் சாவியை பிடுங்கி பிணையக் கைதி போல் வைத்துள்ளனர்: காங்., கூட்டணி எம்எல்ஏ சாடல்!

Rajasthan Crisis: அந்த வீடியோவில், தற்போது நாங்கள் அனைவரும் பிணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளோம், மூன்று நாட்களுக்ககு நாங்கள் எம்எல்ஏ விடுதியில் வைக்கப்பட்டிருந்தோம்.

Advertisement
இந்தியா , (with inputs from ANI)

Rajasthan Crisis: கார் சாவியை பிடுங்கி பிணையக் கைதி போல் வைத்துள்ளனர்: காங்., கூட்டணி எம்எல்ஏ சாடல்!

Highlights

  • கார் சாவியை பிடுங்கி பிணையக் கைதி போல் வைத்துள்ளனர்
  • மூன்று நாட்களுக்ககு நாங்கள் எம்எல்ஏ விடுதியில் வைக்கப்பட்டிருந்தோம்
  • காங்கிரஸூக்கு தற்போது 100 எம்எல்ஏக்களின் ஆதரவே உள்ளது.
Jaipur:

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் முக்கிய நபர்களாக அம்மாநில கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். அப்படி இருக்க பாரதிய பழங்குடியினர் கட்சியை சேர்ந்த நபர்களை இன்று காங்கிரஸூக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளளனர். 

பாரதிய பழங்குடியினர் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தாங்கள் காங்கிரஸூக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் தன்னை பிணையக் கைதி போல் வைத்துள்ளதாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், தற்போது நாங்கள் அனைவரும் பிணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளோம், மூன்று நாட்களுக்ககு நாங்கள் எம்எல்ஏ விடுதியில் வைக்கப்பட்டிருந்தோம். பலர் எங்களுடன் வாருங்கள் என்கின்றனர். இன்று தொகுதியை விட்டு நான் வெளியே சென்ற போது, மூன்று, நான்கு போலீஸ் கார்கள் என்னை பின்தொடர்கிறது.


அந்த போலீஸ் கார்கள் என்னை எங்கும் செல்ல விடுவதில்லை. அவர்கள் என்னையும், எனது காரையும் சுற்றி வளைத்தனர். எனது கார் சாவியை பிடுங்கிக்கொண்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதனிடையே நேற்றைய தினம் பிடிபி கட்சியின் தலைவர் மகேஷ் பாய் கூறும்போது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், நாங்கள் நடுநிலையுடன் இருப்போம் என்று கூறினார். எங்களது எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒற்றுமையாக புறக்கணிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

முதல்வர் அசோக் கெலாட் முகாமில் இருந்து மூன்று எம்எல்ஏக்கள் சென்றதை தொடர்ந்து, மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில் காங்கிரஸூக்கு தற்போது 100 எம்எல்ஏக்களின் ஆதரவே உள்ளது. 

Advertisement

சச்சின் பைலட்டுடனான மோதலுக்கு முன்பு, 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 15 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவு என காங்கிரஸூக்கு மொத்தமாக 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. 

(With inputs from PTI)

Advertisement