This Article is From Jul 24, 2020

சச்சின் பைலட் அணியினர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Rajasthan Crisis: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 101 உறுப்பினர்களை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் பலத்தை மட்டுமே அசோக் கெலாட் தரப்பு கொண்டுள்ளது.

சச்சின் பைலட் அணியினர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

சச்சின் பைலட் அணியினர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

New Delhi:

சச்சின் பைலட் உள்ளிட்ட பிற அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்களா என்பது குறித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது என்றும், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. எனினும், நேற்றைய தினம் முதல்வர் அசோக் கெலாட் கூறும்போது, தனது பெரும்பான்மை உறுதியாக இருப்பதாகவும், சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும் என்றும் கூறினார். 

முதல்வர் அசோக் கெலாட் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அந்த கூட்டங்களில் பங்கேற்காததால், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் அனைவரையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து, தகுதிநீக்கத்திற்கு எதிராக ச ச்சின் பைலட் தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது. 

இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்யும் போது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. கட்சி கூட்டங்களில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை உள்ளது. இந்த கட்டத்தில் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு உத்தரவையும் வழங்க முடியாது என சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 

வீடியோ-கான்பரன்சிங் மூலம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகரின் மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு "நீண்டகால விசாரணை" தேவை, ஏனெனில் அது ஜனநாயகம் தொடர்பான "பெரிய கேள்வி" எழுப்புகிறது. எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே அதன் இறுதி முடிவுக்கு உட்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

சச்சின் பைலட் அணியினருக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவையும் அவர் சந்தித்தார். 

விரைவில் சட்டமன்றத்தை கூட்டுவோம். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒன்றுமையுடன் இருக்கிறோம் என்றும் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் எந்த குழுப்பமும் இல்லாமல் இருக்கும் எம்எல்ஏக்களுடன் கலந்துகொள்ளும் என்று தெரிகிறது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸூக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இதனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கான வெற்றியாக அமைந்துள்ளது, ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 101 உறுப்பினர்களை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் பலத்தை மட்டுமே அசோக் கெலாட் தரப்பு கொணநடுள்ளது. அதனால், சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறையும் அதனால், கெலாட் தரப்பு எளிதில் வெற்றி பெறலாம். 

ஆனால், தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து காங்கிரஸூக்கு எதிராக வாக்களிக்கலாம். அதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் அதிகாரத்தில் நீடிப்பது கடினமாகும். 

இதனிடையே, பாஜக தனது ஆட்சியை கலைக்க முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். அதில், உள்துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் சொந்த கட்சியை சேர்ந்தவர்களின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

.