This Article is From Jul 14, 2020

ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? அசோக் கெலாட்டுக்கு குறையும் ஆதரவு!

Rajasthan:காங்கிரஸ் மூத்த தலைவர் சுர்ஜேவாலா நேற்றைய தினம் சச்சின் பைலட்டிற்கு அழைப்பு விடுத்த போதிலும், அதனை ஏற்க சச்சின் பைலட் மறுத்துவிட்டார்.

Advertisement
இந்தியா

Rajasthan:ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? அசோக் கெலாட்டுக்கு குறையும் ஆதரவு!

New Delhi:

ராஜஸ்தானில் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலை தொடர்ந்து, அங்கு காங்கிரஸ் ஆட்சி ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது. 

பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சுர்ஜேவாலா நேற்றைய தினம் சச்சின் பைலட்டிற்கு அழைப்பு விடுத்த போதிலும், அதனை ஏற்க சச்சின் பைலட் மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, காங்கிரஸ் தலைவர் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தரப்பு கூறும்போது, ராஜஸ்தானில் ஆட்சியை கலைப்பதற்கு
பாஜக சச்சின் பைலட்டை சிக்க வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும், சச்சின் பைலட்டுக்கு கட்சியில் அதிக அங்கீகாரமும், முக்கிய பதவிகளும் வழங்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு 100ஐ விட குறைந்ததாக தெரிகிறது. பாரதிய பழங்குடியினர் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸூக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். தொடர்ந்து, அசோக் கெலாட் பதவியில் நீடிக்க 101 எம்எல்ஏக்களின் பலம் தேவை.

Advertisement

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவில், பாரதிய பழங்குடியினர் கட்சி எம்எல்ஏ ஒருவர் தான் பிணயக் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய கார் சாவியை எடுத்துச்சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

எம்எல்ஏக்கள் கூட்டத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆளுயர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். 

இதனிடையே, நடந்த அனைத்தையும் பொருத்திருந்து பார்த்து வந்த பாஜக சமயம் பார்த்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்துள்ளது. 

Advertisement

இரண்டாவது நாளாக நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் சச்சின் பைலட் பறித்ததை தொடர்ந்து, அவரது துணை முதல்வர் பதவி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. 

Advertisement