காங்கிரஸூக்கு எதிராக தொடர் போர்க்கொடி: எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த சச்சின் பைலட்!
ஹைலைட்ஸ்
- எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த சச்சின் பைலட்!
- சச்சின் பைட்டிற்கு ஆதரவாக குறைந்தபட்சம் 16 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
- பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை.
Jaipur/ New Delhi: ராஜஸ்தான் அரசியலில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் தரப்பினர் சச்சின் பைலட்டுக்கு நேற்றிரவு அழைப்பு விடுத்த போதிலும், இன்று நடந்த இரண்டாவது கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளாதது தொடர்ந்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை மறுத்து வரும் சச்சின் பைலட், தொடர்ந்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சச்சின் பைலட் முகாமில் உள்ள ஆதரவு எம்எல்ஏக்களுடன் நேற்றிரவு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், குறைந்தபட்சம் 16 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
முதல்வர் அசோக் கெலாட்டுக்கு போதிய போதிய பெரும்பான்மை இல்லை என சச்சின் பைலட் கூறியதை தொடர்ந்து, அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களையும், 15 சுயேட்சை எம்எல்ஏக்களையும், கூட்டணி கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்தார். மொத்தமுள்ள 122 எம்எல்ஏக்களில் 106 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 107 எம்எல்ஏக்கள், 13 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு, 5 சிறிய கட்சிகளின் ஆதரவையும் காங்கிரஸ் கொண்டிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையானது 90 காங்கிரஸ் எம்எல்ஏக்களாகவும், 7 சுயேட்சை எம்எல்ஏக்களாகவும் என 102 எம்எல்ஏக்களாக தற்போது குறைந்துள்ளது.
நேற்றிரவு சச்சின் பைலட் முகாமில் உள்ள ஆதரவு எம்எல்ஏக்களின் வீடியோவை வெளியிடப்பட்டது. அதில், 16 எம்எல்ஏக்கள் வரை உள்ளனர். இதுதொடர்பாக அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பினர் கூறும்போது, சச்சின் பைலட்டுடன், 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் என மொத்தம் 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, நேற்று நடந்த கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார். இதனால், ஆட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பாஜக பொறுத்திருந்து கண்காணித்து வருவதகாவும், அதன் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கு முன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையிலான பெரும்பான்மையை நிரூபிக்கும் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் பாஜகவுக்கு 73 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது, ஆட்சியை பிடிப்பதற்கு இன்னும் 35 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
கடந்த வருடத்தில் மட்டும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் விலகல் காரணமாக மத்திய பிரதேசம், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.