Sikar: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புடன் போராடிக்கொண்டிருக்கக்கூடிய இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் "மோடி ஜிந்தாபாத்" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட வற்புறுத்தி இஸ்லாமிய சமயத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
52 வயதான ஆட்டோ ஓட்டுநரான காஃபர் அகமது கச்சாவா வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், அருகிலுள்ள கிராமத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, ஒரு காரில் இருந்த இருவர் அவரைத் தடுத்து புகையிலை கேட்டுள்ளனர். காஃபர் புகையிலையை கொடுத்த பின்னர் அவர்கள் அதை வாங்க மறுத்து "மோடி ஜிந்தாபாத்" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷமிட வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே காரிலிருந்தவர்கள் இறங்கி வந்து காஃபரை தாக்க தொடங்கியுள்ளனர். அவரது வாகனத்தையும் தாக்கியுள்ளனர். என காவல்துறையின் முதல் தகவலறிக்கையில்(FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரத்திற்குள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அவரது தாடியை பிடித்து இழுத்து பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி மீண்டும் தாக்கத் தொடங்கினர். என காஃபர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய கும்பல் கைக்கடிகாரத்தையும் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். பற்கள் உடைபட்ட நிலையில், வீங்கிய கண்களுடனும், முகத்தில் காயத்துடனும் காஃபர் அகமது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
“புகார் அளிக்கப்பட்ட பின்னர் நாங்கள் ஷம்பு தயால் ஜாட், (35), மற்றும் ராஜேந்திர ஜாட், (30). என்கிற இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மது போதையில் சம்பந்தப்பட்டவரை தாக்கியுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.” என சிக்கர் மூத்த காவல்துறை அதிகாரி புஷ்பேந்திர சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.