Read in English
This Article is From Nov 15, 2018

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

மொத்தம் உள்ள 200-ல் 162 வேட்பாளர்களை பாஜக தற்போது வரை அறிவித்திருக்கிறது

Advertisement
இந்தியா

ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

New Delhi:

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 31 பேர் உள்ளனர்.

ஏற்கனவே இந்த தொகுதிகளில் எம்எல்ஏக்களாக இருந்த 15 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் அமைச்சர்கள்.

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் இதுவரைக்கும் 162 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டிருக்கிறது. தற்போது மாநில அமைச்சர்களாக இருக்கும் பாபுலால் வர்மா, ராஜ்குமார் ரின்வா, தன்சிங் ராவத் ஆகியோருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் டிசம்பர் 11-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement

கடந்த 2013-ல் நடந்த தேர்தலின்போது பாஜக மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 163-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement