வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் கோதுமை வழங்கப்படுகிறது.
Jaipur: ராஜஸ்தானில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 1-க்கு ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளின் கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தற்போது ஏழை மக்களுக்கு சலுகை விலையில் கோதுமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதன்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 1-க்கு ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும். அந்த வகையில் 1.53 கோடி பேர் பலன் பெறுவார்கள் என்று மாநில அரசு கூறியுள்ளது.
கடன்களை சரியான நேரத்திற்குள் திருப்பிச் செலுத்தும் ஏழைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.