This Article is From Dec 03, 2019

6 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொலை : சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அழைத்து சென்றேன்; ஒப்புதல் வாக்குமூலம்

சிறுமியிடம் சாக்லேட்டை காட்டி கவர்ந்து பாழடைந்த பகுதி அழைத்து சென்று வன்புணர்வு செய்துவிட்டு சிறுமியை வெளியே விட்டால் காட்டி கொடுத்து விடுவாள் என்று எண்ணி கொலையும் செய்துள்ளார்.

6 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொலை : சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அழைத்து சென்றேன்; ஒப்புதல் வாக்குமூலம்

விளையாட்டு போட்டிக்கு போன சிறுமி காணாமல் போனதாக குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

Tonk, Rajasthan:

ராஜஸ்தான் மாநிலம் டோங்கில்  ஆறுவயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து சிறுமியின் சீருடையில் உள்ள பெல்ட்டைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொலை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அக்கொலையை செய்த நபர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 

இது குறித்து காவல்துறை அதிகாரி ஆதர்ஷ் சித்து பேசியதாவது, “இந்த வழக்கு மிகவும் சவாலாக இருந்தது. 6 வயது குழந்தைக்கு நேர்ந்ததை மனதில் கொண்டு செயல்பட்டோம். பொதுமக்களை சந்தித்து தேவையான தகவலை சேகரித்தோம். இறுதியாக கொலையாளியிடம் விசாரித்தோம். பின் அவரே ஒப்புக் கொண்டதும் அந்நபரை கைது செய்தோம். அவர் குற்றவாளி என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் விரைவில் தயார் செய்வோம்” என்றார். 

கொலைக்கான காரணம் குறித்து பேசியபோது, அந்நபர் மதியம் 12 மணியளவில் பள்ளியை சுற்றுப்புற பகுதியி இருந்துள்ளார். சிறுமியிடம் சாக்லேட்டை காட்டி கவர்ந்து பாழடைந்த பகுதி அழைத்து சென்று வன்புணர்வு செய்துவிட்டு சிறுமியை வெளியே விட்டால் காட்டி கொடுத்து விடுவாள் என்று எண்ணி  கொலையும் செய்துள்ளார். சரியான நேரத்தில் கண்டுபிடிக்காவிட்டால் ட்ரக் ஒட்டுநரான கொலையாளி தப்பி சென்றிருக்கலாம் என்று தெரிவித்தார்.

சனிக்கிழமை சிறுமியின் உடல்  கெதாடி என்ற கிராமத்தில் புதரில் மது பாட்டில்கள், தின்பண்டங்கள் மற்றும் இரத்தக் கரையுடன் கிடந்தது. சிறுமி விளையாட்டு போட்டிக்கு போன சிறுமி காணாமல் போனதாக குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். 

.