Read in English
This Article is From Jul 27, 2020

சட்டமன்ற கூட்டத்தை நடத்த ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல்!

Rajasthan Political Crisis: பொது வெளியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் அனுப்பிய வேண்டுகோளில் அதுதொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை 

Advertisement
இந்தியா Edited by
Jaipur/ New Delhi:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரை அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருந்தார். முதல் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்த நிலையில், இரண்டாவது முறையாக சட்டமன்றத்தை கூட்ட பரிந்துரைத்தார். இந்நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.

“தற்போது சட்டமன்றத்தை கூட்ட வேண்டாம் என்று நான் விரும்பவில்லை, முதல்வர் ஏதேனும் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற விரும்புகிறாரா என்கிற கேள்வியெழுகிறது. அவர் வழங்கியுள்ள பரிந்துரையில் இது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பொது வெளியில் இது குறித்து பேசப்படுகிறது.” என ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.

தொற்றுநோய்களின் போது அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் குறுகிய அறிவிப்பில் அழைப்பது கடினம் என்றும் ஆளுநர் கூறினார். அதே போல கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்களுக்கு 21 நாட்கள் நோட்டீஸ் கொடுப்பது குறித்து பரிசீலிக்க முடியுமா? என்றும் ஆளுநர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், சட்டமன்ற அமர்வின்போது சமூக இடைவெளி எவ்வாறு பின்பற்றப்படும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

சட்டமன்றத்தை கூட்டுவதற்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா? பொது வெளியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் அனுப்பிய வேண்டுகோளில் அதுதொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை 

இதுபோன்ற கொரோனா தொற்று காலத்தில் அனைத்து எம்எல்ஏக்களையும் உடனடியாக கூட்டுவது என்பது கடினமானது. அதனால், எம்எல்ஏக்களுக்கு 21 நாட்கள் அவகாசம் கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். முதல்முறையாக சட்டமன்றத்தை கூட்டக்கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை நிராகரித்த ஆளுநர், அதற்கு ஆறு காரணங்களையும் தெரிவித்திருந்தார். அதில் தேதி குறிப்பிடாதது, காரணம் குறிப்பிடாதது என்று தெரிவித்திருந்தார். 

Advertisement

இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக அனுப்பிய கோப்புகளில், ஜூலை 31ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், பொருளாதாரம் குறித்தும் விவாதிக்க உள்ளதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி சகடந்த வாரம் ராஜ்பவனில் 5 மணி நேரமாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பின்னர். மீண்டும் புதிய கோப்புகளில் சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டது. 

Advertisement

முன்னதாக, கோப்புகள் ரத்து செய்யப்பட்ட போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பதை குறிப்பிட்டதால், இன்று காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வழக்கை திரும்ப பெற்றது. 

இதனிடையே, உயர் நீதிமன்றம் சச்சின் பைலட் தரப்பினருக்கு பாதுகாப்பை வழங்கியது, சபாநாயகரின் அதிகாரங்கள் தொடர்பான பெரிய அரசியலமைப்பு கேள்விகள் முடிவு செய்யப்படும் வரை சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement