Rajasthan Crisis: காங்கிரஸூக்கு எதிராக வாக்களியுங்கள்: 6 கட்சி எம்எல்ஏக்களுக்கு மாயாவதி உத்தரவு!. (File)
Jaipur/ New Delhi: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், காங்கிரஸூக்கு எதிராக வாக்களியுங்கள் என தனது கட்சி எம்எல்ஏக்கள் 6 பேருக்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை ஆட்சியை கவிழ்க்க விடாமல், அசோக் கெலாட் தொடர்ந்து போராடி வருகிறார்.
ஆறு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுடன் இணைந்திருந்தனர். தற்போது மாயாவதியின் உத்தரவின்படி, எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தால் அது சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனெனில், ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் என யாரும் இல்லை.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான கட்சி இந்த ஆறு எம்.எல்.ஏ.க்களை மாநிலங்களவை தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களாக கருத தேர்தல் ஆணையத்தை அணுகியிருந்தது, ஆனால் அதனை சபாநாயகரே முடிவு செய்ய முடியும் என்பதால் தேர்தல் ஆணையம் அதில் தலையிட மறுத்துவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தேசியக் கட்சி என்பதால், ஆறு எம்.எல்.ஏ.க்களின் நிகழ்வில் மாநில அளவில் எந்த இணைப்பும் இருக்க முடியாது என்று கூறி, ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய அளவில் அவர்கள் அதை மீறினால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் ”என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டுவதற்கான ஒரு தேதியையோ அல்லது காரணத்தையோ குறிப்பிடவில்லை என்று சுட்டிக்காட்டிய முதல்தடவை கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். இதைதொடர்ந்து, ஜூலை 31ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டுவதற்காக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அளித்த இரண்டாவது திட்டத்தில் கெலாட் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிகழ்ச்சி நிரல் என்று குறிப்பிட்டுள்ளார்.