This Article is From Jul 20, 2020

தகுதி நீக்க நோட்டீஸூக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Rajasthan Crisis: அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸூக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. 

தகுதி நீக்க நோட்டீஸூக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Jaipur/ New Delhi:

சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நோட்டீஸூக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்க வருகிறது. இதனிடையே, இந்த வாரத்தில் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸூக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. 

கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்துக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

பேரவைக் கூட்டம் நடைபெறாத போது, ராஜஸ்தான் சபாநாயகர் இது போன்ற நோட்டீஸ் வழங்க கூடாது என நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தரப்பு வாதித்துட்டு வருகிறது. தொடர்ந்து, சச்சின் பைலட்டும், அதிருப்தி எம்எல்ஏக்களும் டெல்லி அருகே உள்ள சொகுசு விடுதிகளில் தங்கி வருகின்றனர். 

நீதிமன்ற விசாரணை ஒரு பக்கம் நடக்க, அசோக் கெலாட் ஆட்சியை வீழ்த்துவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு குழுவினர் தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஜூலை 10ம் தேதியன்று முதலமைச்சர் தலைமையிலான விசாரணைக்கு பதிலளிக்குமாறு சச்சின் பைலட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கி, ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்றார்.

கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக ராஜஸ்தான் போலீஸார் அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படும் சொகுசு விடுதிக்கு சென்று திரும்பியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்றும் போலீசார் இதேபோல், ஐடிசி பாரத் கிரண்ட் விடுதிக்கு சென்று திரும்பினர். தொடர்ந்து, ஹரியானா போலீசார் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

அசோக் கெலாட் ஆட்சியை வீழ்த்துவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு குழுவினர் விசாரித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, எம்எல்ஏ பன்வர் லால் ஷர்மாவின் குரல் மாதிரியைப் பெற அவர்கள் வெள்ளிக்கிழமையன்று சொகுசு விடுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர். 

எனினும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஹரியானா போலீசார், ராஜஸ்தான் போலீசாரின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இறுதியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டபோதும், அங்கிருந்து ஒரு சில நிமிடங்களில் ராஜஸ்தான் போலீசார் கிளம்பியதாக கூறுகின்றனர். 

.