This Article is From Jun 10, 2020

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மாநில எல்லைக்கு ஒரு வாரம் சீல் வைக்கும் ராஜஸ்தான்!

Coronavirus: ராஜஸ்தான் மாநிலம், பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மாநில எல்லைக்கு ஒரு வாரம் சீல் வைக்கும் ராஜஸ்தான்!

Coronavirus: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மாநில எல்லைக்கு ஒரு வாரம் சீல் வைக்கும் ராஜஸ்தான்!

Jaipur:

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில எல்லையை ஒரு வாரத்திற்கு சீல் வைப்பதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மாநிலத்திற்குள் செல்லவோ அல்லது வெளியேறவோ முடியும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக காவல் ஆணையர் எம்.எல்.லெதர் அளித்துள்ள உத்தரவில், மாநிலத்திற்குள் அனைத்து இயக்கங்களும் ஒழுங்குபடுத்தப்படும், எந்தவொரு நபரும் என்ஓசி இல்லாமல் ராஜஸ்தானுக்குள் நுழையவோ அல்லது பாஸ் இல்லாமல் வெளியேறவோ முடியாது என்று அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் இன்று காலை புதிதாக 123 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11,300க்கும் அதிகமாக உள்ளது; சுமார் 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான "அன்லாக் 1" திட்டத்தை மத்திய அரசு முன்வைத்த பின்னர், அனைத்து மாநிலங்களும் கடந்த வாரம் கொரோனா வைரஸ் ஊரடங்கை எளிதாக்கியிருந்தன.

ராஜஸ்தான் காவல்துறையினர் மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து ஒரு வாரம் அவற்றை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்றார். ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே பாஸ் வழங்க முடியும்.  இறப்பு, மருத்துவ தேவைகளுக்காக செல்வது போன்ற முக்கிய காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது இன்று காலை 2,76,583 ஆக உயர்ந்தது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,985 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் முதல் முறையாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. 

இதுவரை மொத்தம் 1,35,206 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; கிட்டத்தட்ட 1.33 லட்சம் பேர் இன்னும் தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து பதிவான மொத்த வழக்குகளில், 7,745 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்; கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 279 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் அடிப்படையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.
 

.