This Article is From Oct 29, 2019

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் - Rajini உருக்கம்! #RIPSujith #SorrySujith

#SorrySujith - முன்னதாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

Advertisement
தமிழ்நாடு Written by

#SorrySujith - இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்ததாக தகவல்

#SorrySujith - ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் (Sujith) 80 மணி நேர போராட்டத்திற்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சுஜித்திற்கு, ரஜினிகாந்த் (Rajinikanth) இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி (Trichy), மணப்பாறை (Manapparai) அருகே நடுக்காட்டுப்பட்டியில் (Nadukkapatti) ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்புப் பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. 

முன்னதாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்ததாக அவர் கூறினார்.

சுஜித்தின் மரணத்துக்குப் பல பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று உருக்கமாக கூறியுள்ளார். 

Advertisement

தொடர்ந்து, முதல் நாளில் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்தன. சுஜித்தின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதனிடையே, 70 அடிக்குச் சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுஜித் அசைவின்றி காணப்படுவதாக தகவல்கள் வெளியாயின.

இதையடுத்து, பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Advertisement
Advertisement