This Article is From Jan 24, 2020

“ரஜினி மகள் மறுமணம்…”- ரஜினி - பெரியார் சர்ச்சை; கவனம் பெற்ற செல்லூர் ராஜூவின் பேச்சு!!

Rajini Periyar Row: “இந்த நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்றும், தீண்டாமை போக்கப்பட வேண்டும் என்றும் தனது 95 வயது வரை போராடியவர் பெரியார்"

“ரஜினி மகள் மறுமணம்…”- ரஜினி - பெரியார் சர்ச்சை; கவனம் பெற்ற செல்லூர் ராஜூவின் பேச்சு!!

Rajini Periyar Row: "ரஜினி, எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர். ஆனால், தற்போது அவரை யாரோ தவறாக வழிநடத்தி வருகிறார்கள்"

Rajini Periyar Row: ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி. 

முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார். 

im1ljusg

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ரஜினியின் இந்த கருத்துகளுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக தலைவர்கள், ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் தமிழகத்தின் ஆளுங்கட்சி அதிமுக, ரஜினியை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறது. ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ, “இந்த நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்றும், தீண்டாமை போக்கப்பட வேண்டும் என்றும் தனது 95 வயது வரை போராடியவர் பெரியார். அப்படிப்பட்ட மதிக்கத்தக்கத் தலைவரை ஒரு சம்பவத்தை வைத்து அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

periyar evr ramasamy

ரஜினி, எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர். ஆனால், தற்போது அவரை யாரோ தவறாக வழிநடத்தி வருகிறார்கள். அதனால்தான் அவர் இப்படி அவசரப்பட்டுப் பேசியுள்ளார். ரஜினியின் மகளுக்கு சமீபத்தில் மறுமணம் நடந்தது. அது யாரால் சாத்தியப்பட்டது. ரஜினி பின்பற்றும் மதத்தில் அந்தக் காலத்தில் மறுமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்குமா. ஆனால், இன்று அது சாத்தியமாக உள்ளது. அதற்கு யார் காரணம். பெரியார், தமிழகத்தில் தீர்க்கமாக செய்த போராட்டங்கள்தான் காரணம்,” என்று நெத்தியடியாக பேசியுள்ளார். 


 

.