This Article is From Nov 30, 2018

2.0... - அறிவியல் எழுச்சியா? அறிவின் வீழ்ச்சியா?

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உயிரனங்களின் கொலைக்கருவியா என்னும் மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது

2.0... - அறிவியல் எழுச்சியா? அறிவின் வீழ்ச்சியா?
New Delhi:

சங்கர் பிராமதப்படுத்தி தனக்கான பெயரை மீண்டும் இந்திய திரைத்துறையில் நிலைநிறுத்திக்கொண்டார். ‘2.0 இந்திய சினிமாவின் அடுத்த நகர்வு', இப்படியான விமர்சனங்கள் வரத்தொடங்கிவிட்டன. எல்லாம் சரி 2.0 சொல்லும் அறிவியல் பார்வை என்ன.

நாம் புரிந்து கொள்ள வேண்டியதும் தெரிந்துக்கொள்ள வேண்டியதும் என்ன என்பதை எப்போது அறிவோம். இந்த உலகம் எல்லா உயிரினங்களுக்குமானது. மனிதனின் தேவைக்காக உருவாக்கப்பட்டு மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்கும் இயந்திரங்களின் வளர்ச்சி மனிதனையும், மனிதன் சார்ந்து இயங்கும் உயிரினங்களுக்கும் அபாயமாக மாறும் அறிவியல் வளர்ச்சியின் ஒரு சிறிய பகுதிதான் 2.0 சொல்லும் பிளாஷ்-பேக் கதை.

 

 

பிறந்து குத்துயுரும் குலை உயிருமாக கிடக்கும் அக்ஷய் குமாரின் மீது சிட்டுக்குருவி அமர்ந்து தட்டும் போது உயிர்பெறுகிறார். இந்தக் காட்சி சொல்லும் கணத்தை எல்லா உயிர்களின் தேவையையும், சார்புகளையும் உணர்த்திவிடுகிறது. சிட்டு குருவியால் உயிர்பெற்றார் என்று பெற்றோர்களின் நம்பிக்கையின் ஊடே பறவைகளின் அலாதி அன்பு கொள்ளும் அக்ஷய் குமார் பறவைகளை பற்றியே படித்து பட்டம் பெற்று ஆய்வாளராகிறார்.
 

 

 

 

 

 

வாழ்கை சங்கிலியில் ஒரு சங்கிலி அறுபட்டுபோனால் அது ஒட்டுமொத்த வாழ்வியலையும் தலைகீழாக்கும் என்பதே அக்ஷய் குமாரின் உணர்வுப் போராட்டம். தொலை தொடர்பு நிறுவனங்கள், பயனாளர்கள் என செல்போன் கதிர்வீச்சுகளை கட்டுப்படுத்து அக்ஷய் குமார் முன்னெடுக்கும் போராட்டம் நவீன அறிவியல் வளர்ச்சியின் கட்டாயத் தேவையால் உடைக்கப்படுகிறது.

எதனால் பறவைகள் பாதிக்கப்படுகிறதோ அதே போல் நீயும் ஒரு நாள் அழிந்து போகும் சூழல் வெகுவிரைவில் ஏற்படும் என்பதைக் காட்டுகிறது. சொல்போன் டவரில் தூக்கிட்டுக்கொள்ளும் அக்ஷய் குமாரின் மரணம். இறந்தவர்கள் ஆன்மாவாக இருக்கிறார்கள். பேய் பிசாசு என்று வெகுஜனமக்களின் சொல்லாடலை அறிவியல் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் சங்கர். மனிதன் உயிரோடு இருக்கும் போது அவனுக்குள் பாசிடிவ் எனர்ஜி இயங்கும், இறந்த பிறகு நெகடிவ் எனர்ஜி உருவாகும் என்று அறிவியலின் மொழியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.

அறிவியலின் படைப்பிற்கும், நெகட்டிவ் எனர்ஜிக்கும் நடக்கும் போராட்டாம்தான் வாயைப் பிளக்கும் படத்தின் டெக்னாலஜி ஒர்க். ஒளிப்பதிவு, திரைக்கதை, இசை என எல்லாம் இங்கு பேசு பொருள்தான். பேசப்படவேண்டிய கரு என்ன..?

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உயிரனங்களின் கொலைக்கருவியா என்னும் மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. இன்னும் தெளிவான முறையில் சொல்லப்படவேண்டிய கதைக்கருவை எளிமைப்படுத்தியிருக்களாமோ என்றே தோன்றுகிறது. பிரம்மாண்டத்தின் மோகச்சிறையில் சிக்கிக்கொண்டதோ மீதிக்கதை என்றே தோன்றுகிறது.

.