This Article is From Mar 02, 2020

"அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்

தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களை நேற்று தனது வீட்டில் சந்தித்த பிறகு அவர் இவ்வாறு கூறியுள்ளார்

ஹைலைட்ஸ்

  • என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்
  • வன்முறையை "இரும்பு கரம்கொண்டு" கையாண்டிருக்க வேண்டும்
  • தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை
Chennai:

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த வன்முறையை கண்டித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் நான் செய்வேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களை நேற்று தனது வீட்டில் சந்தித்த பிறகு அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் (முஸ்லீம் அமைப்புத் தலைவர்கள்) கருத்துக்கு நானும் உடன்படுகிறேன், ”என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ குறித்த போராட்டங்களில் 42 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கடுமையாக சாடினார், அவர்கள் வன்முறையை "இரும்பு கரம்கொண்டு" கையாண்டிருக்க வேண்டும் என்று கூறினார். பாஜக தலைமையிலான அரசை கடுமையாக சாடிய அவர், வன்முறையை நசுக்க முடியாவிட்டால் அதிகாரத்தில் இருப்பவர்களை "ராஜினாமா செய்ய செல்லுங்கள்" என்று கூறினார்.

.