This Article is From Aug 15, 2019

''காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா கையாண்டது அருமையான ராஜ தந்திரம்'' : ரஜினி பாராட்டு!!

எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க கூடாது என்பதை மதிப்பிற்குரிய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

''காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா கையாண்டது அருமையான ராஜ தந்திரம்'' : ரஜினி பாராட்டு!!

மோடியையும், அமித் ஷாவையும் அர்ஜுனர் கிருஷ்ணருடன் ரஜினி ஒப்பிட்டு பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஷ்மீர் விவகாரத்தில் மோடியும், அமித் ஷாவும் கையாண்டது அருமையான ராஜ தந்திரம் என்று ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

காஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித் ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டனர். அதாவது கிருஷ்ணா, அர்ஜுனா அப்படின்னு சொன்னா ப்ளான் கொடுப்பவர், அதை நிறைவேற்றுபவர். காஷ்மீர் பிரச்னை எவ்வளவு பெரிய விஷயம்! இந்த நாட்டோட பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது. 

பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய்வீடா இருக்கு. இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ நுழைவாயிலா காஷ்மீர் இருக்கு. அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ராஜ தந்திரமா முன்னாடியே 144 தடை உத்தரவை ஏற்படுத்தி, அங்கு பிரச்னை செய்பவர்களை வீட்டுச் சிறையில் வைத்து விட்டு அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், மாநிலங்களவையில் பெரும்பான்மையை ஏற்படுத்தி அதற்கு பின்னர் மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். இது அருமையான ஒரு ராஜதந்திரம். 

இதனை விவாதம் செய்து, அது பிரிவினைவாதிகளுக்கெல்லாம் தெரிந்திருந்தால் இப்படி நடக்கவே விட்டிருக்க மாட்டார்கள். தயவு செய்து அரசியல்வாதிகள் எதை அரசியல் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது நாட்டோட பாதுகாப்போட பிரச்னை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.