Chennai: சென்னை: முன்னனி தமிழ்நாடு அரசியல் கட்சிகள் எதிர்த்த ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறையை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிதுள்ளார்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை’ ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளின் பணம், நேரத்தை சேமிக்கலாம் என்றார்.
பொது தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவு பின்னர் எடுக்கப்படும் என்றார். அடுத்து நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், ரஜினிகாந்தின் தனி கட்சி போட்டியிடும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை-சேலம் இடையே அமைக்கவுள்ள எட்டு வழி சாலை திட்டத்தை குறித்த கேள்விக்கு, இது போன்ற பசுமை வழி சாலை திட்டங்களினால் நாடு வளர்ச்சி அடையும், பலருக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்று கூறினார்.
எனினும், பசுமை வழி சாலை அமைப்பதற்கு, குறைந்த அளவிலான விவசாய நிலங்களை பயன்படுத்த தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். மேலும், நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றார்
குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக ஊழல் மோசடி நடப்பதாக பாஜக கட்சி தலைவர் அமித்ஷா கூறிய கருத்து பற்றி கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்த ரஜினி, “அமித்ஷாவின் கருத்துக்களுக்கு, அவரிடம் தான் ஊடகங்கள் கேட்க வேண்டும்” என்றார்.
மேலும், இந்தியாவை பொறுத்த வரை, தமிழகத்தில் சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. கல்வி துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.