This Article is From Feb 13, 2019

ரஜினி ரசிகரின் தலைக்கு 10 கோடி விலை பேசினாரா சீமான்? - அதிர்ச்சி வீடியோ

சூப்பர் ஸ்டாரை வாழும் கடவுள் எனவும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தும் ரஜினிக்கானது எனவும் கூறியிருந்தார்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • உடல், பொருள், ஆவி அனைத்தும் ரஜினிக்கானது எனவும் கூறியிருந்தார்.
  • காவல் துறையை உயிருக்கு மேல் மதிப்பதாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார்.
  • இரத்தம் சொட்ட காணொலியை பதிவிட்டிருந்தார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகரான ரஜினி பழனி அண்மையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் பேசியிருந்ததாவது,

​சூப்பர் ஸ்டாரை வாழும் கடவுள் எனவும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தும் ரஜினிக்கானது எனவும் கூறியிருந்தார். வாழும் மகான் ரஜினியின் மீது ஆணை, சட்டத்திற்கு புறம்பான செயல்களை தன் வாழ்நாளில் எப்போது செய்ய மாட்டேன் எனவும், சீமானின் தம்பிகள் தனக்கு இரவு நேரங்களில் ஃபோன் செய்து மிரட்டுவதாகவும் இந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும் காவல் துறையை உயிருக்கு மேல் மதிப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த காணொலியின் விளைவாக, அவர் அடுத்து பதிவிட்ட காணொலியில், தலையில் வெட்டு காயங்களோடு, இரத்தம் சொட்டும் நிலையில், தன்னை சீமான் கட்சிக்காரர்கள் வெட்டி விட்டதாக பதிவிட்டிருந்தார். ரஜினி ரசிகரான ரஜினி பழனியின் இந்த காணொலிக்கு சூப்பர் ஸ்டாரின் ரியாக்‌ஷன் என்னவாயிருக்கும்?

Advertisement