ஹைலைட்ஸ்
- இந்த வாரம் வெள்ளிக் கிழமை `காலா' ரிலீஸ் ஆகிறது
- பா.ரஞ்சித்- ரஜினி கூட்டணியில் வரும் 2-வது படம் `காலா'
- மும்பை, தாராவியை மையமாகக் கொண்டது `காலா'-வின் கதைக்களம்
காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறிய ஹுமா குரேஷி, சூப்பர்ஸ்டாரின் எளிமையான தோற்றம் குறித்து ஆச்சரியப்பட்டுள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ படத்தில், ஹூமா குரேஷி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மும்பை தாராவியில் வாழும் தாதா கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். “ரஜினி சார் உடனான உரையாடலில் இருந்து, அவர் மிகவும் எளிமையாகவும் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பதையும் தெரிந்து கொண்டேன். சில சமயங்களில், ஒருவரின் புகழுக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்வார்கள் என எண்ணுவோம். ஆனால், ரஜினி சார் அவருடைய கடந்த கால நினைவுகள் குறித்தும், பேருந்து நடத்துனராக இருந்து ஒரு புகழ்பெற்ற நடிகராக வந்த பயணத்தை குறித்தும் எளிமையாக பகிர்ந்து கொண்டார்” என்று பிடிஐயிடம் கூறினார் நடிகை ஹுமா குரேஷி.
இந்தியாவில் தலை சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும், படப்பிடிப்புத் தளத்தில் தனது புகழை வெளிக்காட்டது, அனைவருடனும் அன்பாக இருப்பார். “காலா படத்தில் பணியாற்றும் முன்னாரே, அவரின் புகழை குறித்து அறிந்துள்ளேன். எனவே, படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் என என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய பின்னர், அவரது எளிமையை கண்டு ஆச்சரியம் அடைந்தேன்” என்றார்.
“இயக்குநரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நடிப்பார். அவரிடம் இருந்து நான் பலவற்றை கற்றுக்கொண்டேன். ஒருநொடி அளவும், அவரது புகழினை படப்பிடிப்பு தளத்தில் காண முடியவில்லை” என்றார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் படம் ஜாலி LLB 2 படத்தில் நடித்ததற்குப் பிறகு, `காலா' படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷிடமிருந்து அழைப்பு வந்ததாக கூறினார். பிறகு கதைக்களம் தெரிந்துகொள்ள சென்னை விரைந்த ஹூமா குரேஷி, கதை பிடித்துப் போகவே, உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
காலா படத்தில் நடித்த அனுபவங்களை பகிரும் போது, "இயக்குநர் ரஞ்சித்தின் அரசியல் குரல் படமெங்கும் ஒலித்திருக்கும். அதற்காக, தனிப்பட்ட முறையில் இந்த படத்தில் நடித்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறேன். சில நிலைபாட்டுடன் இருப்போருடன், பணியாற்றுவதை நான் விரும்புவேன். அது என்னுடைய நிலைபாடாகவும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சாதரண கதைக் களத்தில் இருந்து, வேறுபட்டு நடிக்க ஆசைப்படுகிறேன்." என்றார்.
"வழக்கமான ரஜினிகாந்த் படங்களில், நடிகைகளுக்குக் குறைந்த முக்கியத்துவம் கொண்ட கதாப்பாத்திரங்களே இருக்கும். ஆனால், காலா அதிலிருந்து மாறுபட்டது. ரஜினிகாந்த் படத்தில் இருந்தாலும் கூட, ஆடல் பாடலுக்கு காட்சிகளுக்கு மட்டும் தோன்றும் நடிகையின் கதாப்பாத்திரமாக இருக்காது” என்றார்.
“நடிப்பிற்கான முக்கியத்துவம் அளித்து நிறைய காட்சிகள் இடம்பெறும். ரசிகர்கள் கண்டிப்பாக ஏமாறமாட்டார்கள்” என்று கூறினார். 31 வயதான நடிகை ஹூமா குரேஷி, காலா திரைப்படத்தில் நடிப்பது, சவாலாக இருந்ததாகவும் கூறினார். “இயக்குநர் குழுவில் கொடுத்த ஆதரவினால், மொழி தெரியாத போதும், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முடிந்தது. முதல் மூன்று நாட்களுக்குக் கடினமாக இருந்தாலும், வசனங்களின் அர்த்தங்களையும், பேசும் தொணியையும் கற்றுக்கொண்டேன். படக்குழுவின் ஆதரவினாலும் உதவியாலும், மொழி தெரியாத படத்தில் நடிப்பது போன்ற எண்ணம் இருக்கவில்லை. மகிழ்ச்சியாகவும், பலவற்றை கற்றும் இந்தப் படத்தில் நடித்துள்ளேன்” என்றார். காலா படத்தில், மற்றொரு புகழ்பெற்ற நடிகர் நானா படேக்கார் நடித்துள்ளார், ஜூன் 7 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)