Read in English
This Article is From May 09, 2019

7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி! கவர்னரே முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் கருத்து!!

7 பேர் விடுதலை விவகாரம் என்பது கவர்னரின் பரிசீலனையில் இருப்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Written by

குண்டுவெடிப்பின்போது ராஜிவ் காந்தியுடன் உயிரிழந்தவர்களுடைய உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக கவர்னரே முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் சிறைத்தண்டனை பெற்று வருகின்றனர். 

அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உடனடியாக தீர்மானம் நிறைவேறியது. 

இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதில் அவர் கையெழுத்திடாமல் தாதமதம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே குண்டுவெடிப்பின்போது ராஜிவ் காந்தியுடன் உயிரிழந்தவர்களுடைய உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். 

Advertisement

அவர்கள் 7 பேரை விடுவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து கவர்னரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

7 பேர் விடுதலை விவகாரம் என்பது கவர்னரின் பரிசீலனையில் இருப்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement