This Article is From Sep 17, 2018

ராஜீவ் வழக்கு : 7 பேரை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி

ராஜீவ் வழக்கு : 7 பேரை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரைக்கும் 7 பேரை விடுவிப்பதில் சிக்கல் ஏதும் இல்லாதிருந்த நிலையில் தற்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பியுள்ளது.

1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அவருடன் சிலர் உயிரிழந்தனர். அவர்களில் அப்பாஸ் என்பவரது தாயாரும் ஒருவர். தாயார் கொல்லப்பட்டபோது 8 வயது சிறுவனாக இருந்த அப்பாஸுக்கு தற்போது 35 வயது ஆகிறது.

கடந்த 2014-ம் ஆண்டின்போது 7 பேரை விடுதலை செய்வதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து அப்பாஸ் உள்பட 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தற்போது, 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் அப்பாஸ் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அவர் கேட்டிருக்கிறார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த 4 வாரங்களில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு 7 பேரின் விடுதலையில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.