This Article is From Oct 29, 2019

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி சிறையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்

சிறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவரது கணவர் முருகனுடன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்ததாகவும் விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி சிறையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்

இதற்குமுன் விடுதலை செய்யக்கோரி மாநில அரசுக்கு பல மனுக்களை வழங்கியதாக தெரிவித்தார்.

Vellore:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி நளினி ஸ்ரீஹரன் இன்று வேலூர் பெண்கள் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

சிறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவரது கணவர் முருகனுடன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்ததாகவும் விடுவிக்கப்பட வேண்டுமென கூறினார்.

இதற்கு முன்விடுதலை செய்யக்கோரி மாநில அரசுக்கு பல மனுக்களை வழங்கியதாக தெரிவித்தார்.

நளினி கடைசியாக சிறையிலிருந்து ஜூன் 25 அன்று 30 நாட்களுக்கு பரோலில் விடுவிக்கப்பட்டார். பின்பு பரோல் 51 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 15 அன்று மீண்டும் சிறைக்கு சென்றார்.

2016 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவருக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. நளினியின் மகள் சரித்ரா ஸ்ரீஹரன் சிறையில் பிறந்தார். தற்போது லண்டனில் மருத்துவ பயிற்சியாளராக உள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி மற்றும் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மே 1991இல் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பேரணியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்கொலை படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்தனர்.

.