Read in English
This Article is From Jun 16, 2018

மகனை “கருணை கொலை” செய்ய வேண்டி பேரரிவாளன் தாயார் நீதிமன்றத்தில் மனு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக அற்புதம்மாள் கூறினார்.

Advertisement
இந்தியா

Highlights

  • மத்திய மற்றும் மாநில அரசுகளிடன் தன் மகனை கருணை கொலை செய்யுமாறு மனு
  • காவல் துறையினரால் 19 வயதில் கைது செய்யப்பட்ட என் மகனுக்கு தற்போது 47 வயது
  • இது போன்ற வாழ்க்கையை இனி தொடர வேண்டாம்
Chennai:

 

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு குற்றிவாளிகளின் விடுதலை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்ததை அடுத்து, தனது மகனுக்கு “கருணை கொலை” கேட்டு பேரரிவாளனின் தாயார் மனு அளித்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரரிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

 

“இது போன்ற வாழ்க்கையை இனி தொடர வேண்டாம். மத்திய மற்றும் மாநில அரசுகளிடன் என் மகனை கருணை கொலை செய்யுமாறு மனு அளிக்க உள்ளேன்” என்றார் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

 

முன்னாள் சிபிஐ அதிகாரியால் ஒலிப்பதிவு செய்யபட்ட,பேரரிவாளனின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாததை அற்புதம்மாள் நினைவு கூறினார்.

 

“காயம் இருந்ததால் காவல் துறையினரால் 19 வயதில் கைது செய்யப்பட்ட என் மகனுக்கு தற்போது 47 வயதாகிறது. அவனது வாழ்க்கையின் இளமையை, பெரும் பகுதியை அவன் இழந்துவிட்டான்” என்றார்

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக அற்புதம்மாள் கூறினார்.

 

கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாடு ஶ்ரீபெரும்பத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அந்த அசம்பாவிதத்தின் போது, குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பேட்டரிகளை பேரரிவாளன் வைத்திருந்தகாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

 

கடந்த ஜூன் 5 ஆம் தேதி அன்று, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படுவது மத்திய அரசின் முடிவில் உள்ளது என தமிழக அரசு கூறியிருந்தது.

 

குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவரா என்று சட்டசபையில் ஏற்பட்ட விவாத்தின் போது, “இந்த வழக்கை பொறுத்தவரையில் இரண்டாவது முடிவு இல்லை” என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.





 
Advertisement
Advertisement