Read in English বাংলায় পড়ুন
This Article is From Aug 10, 2018

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு,உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

Advertisement
இந்தியா

Highlights

  • சிபிஐ, எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
  • தமிழக அரசு, எழுவரையும் விடுதலை செய்ய கோரிக்கை வைத்தது
  • 27 ஆண்டுகளுக்கும் மேல் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் சிறையில் இருக்கின்றனர்
New Delhi:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஒரு முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், இந்தக் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, குற்றவாளிகளை விடுதலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று அரசு, நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து தமிழக அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியே தெரிவிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் கூறியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இந்நிலையில், தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க கோரி மனு செய்திருந்தது. இது குறித்து நீதிமன்றம், மத்திய அரசிடம் கருத்து கேட்டிருந்தது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு இது குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது’ என்று சொல்லியது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement