Read in English
This Article is From Sep 20, 2019

''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்!!

ரசாயன - உயிர்க்கொல்லி ஆயுதங்கள் என்பவை உயிரை மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கியம், சொத்துக்கள், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றையும் பாதிக்கும் என ராஜ்நாத் தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுனர்களை ராஜ்நாத் பாராட்டினார்.

Gwalior:

மத்திய பாதுகாப்பு படைகள் ரசாயனம் மற்றும் உயிர்க்கொல்லி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பாதுகாப்பு படை தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

மத்திய பாதுகாப்பு படைகள் ரசாயனம் மற்றும் உயிர்க்கொல்லி ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

ரசாயன - உயிர்க்கொல்லி ஆயுதங்கள் என்பவை உயிரை மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கியம், சொத்துக்கள், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றையும் பாதிக்கும். இவற்றால் ஏற்படும் ஆபத்துக்களை முன் கூட்டியே கண்டுபிடித்து பாதுகாப்பு படைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement

பாதுகாப்பு பணிகள் மூலம் ராணுவத்தினர் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோன்று பாதுகாப்பு நிறுவனங்களில் புதியனவற்றையும், நவீன ஆயுதங்களை உருவாக்கவும் விஞ்ஞானிகள் பாடுபடுகின்றனர். இந்த இருவருமே நாட்டிற்கு சம அளவில் பங்களிப்பு செய்கின்றனர். 

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

Advertisement
Advertisement