हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 08, 2019

கேபினட் கமிட்டியில் இடம்பெற்றதை தொடர்ந்து, அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement
இந்தியா Edited by

ஆலோசைக் கூட்டம் மேற்கொள்ளும் முதல், அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவார்.

Highlights

  • புதிய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளும் முதல் அமைச்சர் ஆவார்.
  • இந்த சந்திப்பு அமித்ஷாவையும் உள்ளடக்கியது ஆகும்.
  • நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
New Delhi:

புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முறைசாரா கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரகள் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுக்களில் அவர் இடம்பெற்ற மறுநாளே அவர் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, மோடியின் 2ஆவது புதிய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளும் முதல் அமைச்சர் ராஜ்நாத் சிங்கே ஆவார்.

இந்த அரசின் 2வது அதிகாரம் கொண்டவராக பார்க்கப்படும் அமித்ஷா, 8 கேபினட் கமிட்டியிலும் இடம்பெற்றுள்ளார். அவரும் ராஜ்நாத் சிங் மேற்கொண்ட கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Advertisement

முன்னதாக, மோடி தலைமையிலான முதல் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார் ராஜ்நாத் சிங். இந்த முறை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங், கேபினட் கமிட்டியில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கமிட்டியில் மட்டுமே இடம் பிடித்தார். அவர், மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் அரசியல் விவகாரங்கள் கமிட்டியில் சேர்க்கப்படவில்லை.

மத்திய அரசில் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருப்பதாக பார்க்கப்படும் ராஜ்நாத் சிங், இவ்வாறு முக்கிய அமைச்சரவைக் குழுக்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியது.

Advertisement

இதைத்தொடர்ந்து, அமைச்சரவைக் குழுக்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மேலும் 4 குழுக்களில் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டார். அதாவது, நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரகள், முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு உள்ளிட்ட அமைச்சரவைக் குழு கமிட்டியில் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டியை பிரதமர் மோடி தலைமை தாங்கி வழிநடத்துவார். அதில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், சதாநந்தா கவுடா, நரேந்திர தோமர், ரவிஷங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஜெய்ஷங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Advertisement