New Delhi: புதுடில்லி: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கியமான அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தண்ணீர் திறந்து விடப்பாடுள்ளன.
வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கேரளா செல்கிறார். அவருடன் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ், உள்துறை அமைச்சகம் உயர் அதிகாரிகள் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
திருச்சூர், எர்ணாக்குளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு போன்ற முக்கிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களக்கு நிவாரண பொருட்கள் அளிக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், 31 படகுகளுடன் 404 மீட்பு பணியாளர்கள் நிவாரண பணிகளுக்கான தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நடைப்பெற்ற மீட்பு பணிகளில், 398 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்த வருவதால், நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கேரள அரசின் மீட்பு பணிகளுக்கு உதவியாக ராணுவம், கப்பற்படையினர், ஆகியோர் கேரளா விரைந்துள்ளனர்.
இன்று கேரளா செல்ல இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று பார்வையிடுகிறார். பின்னர், மாநில முதலமைச்சர், அதிகாரிகளுடன் மீட்பு பணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.