Read in English
This Article is From Jul 10, 2020

‘வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் முன்னணியில் நிற்பவர்’ – ராஜ்நாத்துக்கு மோடி வாழ்த்து

இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோருடன் லடாக் பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Advertisement
இந்தியா

பல்வேறு அரசியல் தலைவர்கள் ராஜ்நாத் சிங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

New Delhi:

வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னணியில் நிற்பவர் என்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது வாழ்த்துப்பதிவில் கூறியிருப்பதாவது-

ராஜ்நாத் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அறிவாற்றல் இந்திய அரசுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் அவர் முன்னணியில் இருக்கிறார். அவர் எப்போதும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் உழைக்கிறார். நீண்டகாலம் அவர் சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.

Advertisement

இவ்வாறு மோடி தனது வாழ்த்துப்பதிவில் கூறியுள்ளார்..

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், ‘நாட்டுக்கும், கட்சிக்கும் ராஜ்நாத் சிங் செய்திருக்கும் தியாகத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் முன் உதாரணமாக இருந்து வருகிறார். அவருக்கு கடவுள் நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்' என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா தனது ட்விட்டர் பதிவில், ‘மிகச்சிறந்த அரசியல் அடையாளமாக ராஜ்நாத் சிங் இருந்து வருகிறார். அவர் இந்த தலைமுறை மக்களுக்கு மிகவும் தேவையானவர்' என்று கூறியுள்ளார்.

இதேபோன்று பல்வேறு அரசியல் தலைவர்கள் ராஜ்நாத் சிங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோருடன் லடாக் பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Advertisement
Advertisement