Read in English
This Article is From Jun 27, 2018

ராஜ்யசபா துணை சபாநாயகர் பதவி: பாஜக-வுக்கு எதிராக வியூகம் வகுக்கும் எதிர்கட்சிகள்!

ராஜ்யசபா துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement
இந்தியா ,

Highlights

  • திருணாமூல் காங்கிரஸ் எம்.பி சேகர் ராய் எதிர்கட்சி வேட்பாளாராக இருக்கலாம்
  • ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்படவில்லை
  • ஜூலை 17-ம் தேதி ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கும்
New Delhi:

ராஜ்யசபா துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., சுகேந்து சேகர் ராய் தான் எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளராக இருப்பார் என்று பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விஷயத்தைப் பொறுத்தவரை காங்கிரஸும் திரிணாமூல் காங்கிரஸுடன் சேர்ந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., டெரக் ஓப்ரியன், ‘எதிர்கட்சிகளின் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவரை நிறுத்துவோம்’ என்று கூறியுள்ளார். 

ராஜ்யசபாவில் மொத்தம் இருக்கும் 245 இடங்களில் காங்கிரஸுக்கு மட்டும் 51 சீட்கள் இருக்கின்றது. ஆனால், இந்த எண்ணிக்கையை வைத்து மட்டும் பாஜக-வை வெற்றி கொள்ள முடியாது என்பதால், மற்ற எதிர்கட்சிகளுடன் சேர்ந்து செயலாற்ற காங்கிரஸ் விருப்பப்படுவதாக தெரிகிறது.

கடைசியாக ராஜ்யசபா துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி வந்தது 1992-ல் தான். அப்போது பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் நேரடியாக போட்டி நடந்தது. காங்கிரஸ் 128 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 95 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்தவுடன், ஜூலை 18 ஆம் தேதி ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கும்.

Advertisement