This Article is From Aug 01, 2020

மாநிலங்களவை உறுப்பினர் அமர் சிங் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்!

அமர் சிங் மற்றும் நடிகர் ஜெயா பிராடா ஆகியோர் "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக" பிப்ரவரி 2010 இல் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை உறுப்பினர் அமர் சிங் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்!

முன்னாள் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர் சிங் இறப்பதற்கு முன்பு நீண்ட நோயுடன் போராடி வந்தார்

New Delhi:

சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான 64 வயது மதிக்கத்தக்க அமர் சிங் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். சிறுநீரக தொடர்பான நோயில் அறுவை சிகிச்சைக்காக மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

2008 காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் (யுபிஏ) சமாஜ்வாடி கட்சி முக்கிய பொறுப்பு வகித்திருந்தது. இவருடைய மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை ட்வீடரில் பதிவு செய்துள்ளனர்.

“ஸ்ரீ அமர் சிங் ஜியின் ஆத்மாவுக்கு கடவுள் அடைக்கலம் கொடுப்பார். ஸ்ரீ அமர் சிங் ஜியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த சோகமான தருணத்தில் அவரது துயரமடைந்த மனைவி மற்றும் மகள்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா ட்வீட் செய்துள்ளார்.

“மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ அமர் சிங் மறைந்த செய்தியில் இருந்து துக்க உணர்வு ஏற்பட்டுள்ளது. பொது வாழ்வில் அவருக்கு அனைத்து கட்சிகளிடையேயும் நட்பு இருந்தது. அவரது குடும்பத்திற்கு எனது இரங்கல்.” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

அமர் சிங் மற்றும் நடிகர் ஜெயா பிராடா ஆகியோர் "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக" பிப்ரவரி 2010 இல் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.