This Article is From Mar 19, 2020

சரத்பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்பட 7 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு!!

மகாராஷ்டிராவில் 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதற்கான தேர்தல் வரும் 26-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
இந்தியா Edited by

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Highlights

  • நாடு முழுவதும் 48 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது
  • ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடக்கிறது
  • மகாராஷ்டிராவில் போட்டியின்றி மாநிலங்களவை தேர்தல் முடிந்துள்ளது
Mumbai:

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்பட 7 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிராவில் 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதற்கான தேர்தல் வரும் 26-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சரத்பவார், ராம்தாஸ் அத்வாலே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பவுசியா கான், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, முன்னாள் காங்கிரஸ் எம்பி ராஜிவ் சாதவ், பாஜகவின் உதயன்ராஜே போசலே, பகவத் காரத் ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளனர். 

இன்று வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாள் என்பதாலும், வேறு யாரும் போட்டியிடாததாலும் இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

Advertisement

சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பலம் அடிப்படையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் 4 வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியது. பாஜக தரப்பில் 3 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 

கடைசியாக சுயேச்சை வேட்பாளர் ராகேஷ் சவான் கடந்த வெள்ளியன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 

Advertisement

நாடு முழுவதும் மகாராஷ்டிராவில் 7 உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 48 உறுப்பினர்கள் பதவி ஏப்ரலில் காலியாகிறது. இதனை நிரப்புவதற்காக அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 

மகாராஷ்டிராவில் சரத்பவார், அத்வாலே என்.சி.பி.யின் மஜித் மேமன், பாஜகவின் அமர் சாப்லே, சிவசேனாவின் ராஜ்குமார் தூத், சுயேச்சை எம்.பி. சஞ்சய் ககாடே ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம்தேதி நிறைவு பெறுகிறது. 

Advertisement