This Article is From Mar 19, 2020

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு!!

உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதால் 26-ம்தேதி மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு!!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகிறது
  • திமுக நிறுத்திய வேட்பாளர்கள் 3 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்
  • அதிமுக தரப்பில் தமாக தலைவர் வாசன் உள்பட 3 பேர் தேர்வு

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சட்டப்பேரவை செயலர் இன்று தெரிவித்துள்ளார். 

உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதால் 26-ம்தேதி மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் செய்வது கடந்த 6-ம்தேதி தொடங்கி 13-ம்தேதி நிறைவுபெற்றது. 

இந்த தேர்தலில் அதிமுக தரப்பு வேட்பாளர்களாக கே.பி. முனுசாமி, தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.

திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.  

இந்தநிலையில், கே.பி. முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன், அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களைத் தவிர இன்னும் 3 பேர் சுயேச்சையாகக் களமிறங்கினர். அவர்களின் வேட்பு மனு தள்ளுபடியானது. 

இந்த 6 பேரை தவிர்த்து வேறு யாரும் போட்டியில் இல்லாததால் இந்த 6 பேரும் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று அறிவித்தார். 

.