This Article is From Jul 24, 2019

ஷங்கர் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்; இந்தியன் 2 முக்கிய அப்டேட்!

இப்படத்தில் சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின

ஷங்கர் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்; இந்தியன் 2 முக்கிய அப்டேட்!

ஹைலைட்ஸ்

  • இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
  • அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
  • லைகா நிறுனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகி இருக்கிறார்

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இவர்களுடன் இப்படத்தில் இணையும் நடிகை நடிகர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது.

அதன்படி இப்படத்தில் சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின இதனை அடுத்து, இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தற்போது செய்தி வெளியாகி இருக்கிது.

0sgibhfo

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.  தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்த கமல் தற்போது தேர்தல் முடிந்ததால் அடுத்த மாதம் முதல் இப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடையர தாக்க, எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கார்த்தி நடிப்பில் வெளியான தேவ், சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி,கே. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.