ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் நிர்வாகி மஹந்த் ருத்ய கோபால் தாஜ் மகராஜ்.
New Delhi: ராமர் கோயில் கட்டும் பணியை விரைந்து ஆரம்பியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் ருத்ய கோபால்தாஜ் மகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'நாங்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தோம். அவரிடம் ராமர் கோயிலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதனை ஏற்ற மோடி அதற்கு உத்தரவாதம் அளித்தார். அவர் அயோத்திக்கு வந்து பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்' என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ம்தேதி உச்ச நீதிமன்ற ராமர் கோயில் விவகாரத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலை கட்டிக் கொள்ளலாம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலாக சன்னி வக்ப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்குத் தொடர்ந்தவர்களில் ஒருவரான ராம ஜென்ம பூமி அமைப்பு ராமர் கோயில் கட்டும் பணியை விரைந்து ஆரம்பியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளது.