சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
Mumbai: ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சி மீண்டும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்பதில் சிவசேனா கட்சி உறுதியுடன் உள்ளது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
அயோத்தியில் ராமர் கோயில் அமைவது என்பது சாதாரண பிரச்னை அல்ல. அது இந்தியாவின் மரியாதை மற்றும் உணர்வுடன் தொடர்புடையது.
சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகம் மும்பையில்தான் உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 24-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில்பங்கேற்கிறார்.