This Article is From Jun 05, 2019

தமிழகம், புதுவையில் இன்று ரம்ஜான் பண்டிகை! - அரசு தலைமை காஜி அறிவிப்பு!!

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழகம், புதுவையில் இன்று ரம்ஜான் பண்டிகை! - அரசு தலைமை காஜி அறிவிப்பு!!

தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை, லால் குடி பகுதியில் பிறை தென்பட்டதாக தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

பிறை தென்பட்டதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகின்றனர். இது அவர்களின் 5 கடமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டில் நோன்பு நோற்பது மே 5-ம்தேதி தொடங்கியது. இதையடுத்து சூரிய உதயத்திற்கு முன்பாக உணவு உண்பதை முடித்துக் கொண்ட முஸ்லிம்கள், மாலை சூரியன் மறைந்த பின்னர் விரதத்தை முடித்து வந்தனர். 

ரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிறை தென்பட்டதால் அங்கு நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

தமிழகத்திலும் ஒரு சில முஸ்லிம் அமைப்பினர் ரம்ஜானை நேற்று கொண்டாடினர். இருப்பினும், பெரும்பாலானவர்கள் இன்று பிறை தென்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்பட்டதாக அரசு தலைமைக் காஜிக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

.