This Article is From Feb 28, 2020

தமிழகத்தில் என்ஆர்சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பீகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்.

Advertisement
இந்தியா Edited by

2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்

Highlights

  • பிகார் போல தமிழகத்திலும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
  • அஸ்ஸாம் தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC தயாரிக்கப்படாது என உறுதி
  • மக்களிடம் நிலவி வரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்

பீகார் மாநிலத்தைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, “பீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பீகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. 

தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவி வரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement